குடிக்கிற தண்ணியில இந்த பொடிய கொஞ்சம் கலந்து குடிச்சா போதும்!

நம் ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் நீர் மிகவும் இன்றியமையாதது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நம்முடைய பிஸியான வாழ்க்கை முறையில் தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகிறோம்.

ஏன் ஒரு பாட்டில் தண்ணீரை அடைத்து குடிக்கக் கூட நம் எல்லோருக்கும் சோம்பேறித்தனம் தொற்றிக் கொள்கிறது.

உங்கள் உடல் உறுப்புகள் எல்லாம் சீராக இயங்க தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று.

ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் தண்ணீர் குடிப்பதாக உறுதி செய்து கொள்ளுங்கள்.

இதை நீங்கள் நாங்கள் கூறுவதை போன்று கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு பின்பற்ற ஈஸியாக இருக்கும்.

அதிகாலை எழுந்ததும் 2-3 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அதில் கொஞ்சம் எலும்பிச்சை ஜூஸ் அல்லது பட்டை பொடி சேர்த்து கொண்டால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும்.

அதே மாதிரி நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் முழுவதும் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு தேவையான உணவை ‌தயாரிக்கும் போது ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

முடிந்தால் வாட்டர் ஆப் போன்றவற்றை டவுண்லோட் செய்து அடிக்கடி அலாரம் வைத்து ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கும் மறக்காமல் இருக்கும். வேலையில் இருக்கும் போது கூட 1-2 மணி நேரத்துக்கு ஒரு முறை வாட்டர் கூலர் இருக்கும் இடம் வரை நடந்து செல்லுங்கள். இது நீங்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தும்.

தாகம் எடுக்கும் போது சோம்பேறித்தனம் பார்க்காமல் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். தாகத்தையும் பசியையும் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். நிறைய பேர்கள் தாகத்தை தவறாக புரிந்து கொண்டு நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு எடையை கூட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.

எனவே அவ்வாறு செய்யாமல் தாகம் எடுக்கும் போது தண்ணீர் மட்டும் அருந்துங்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் அதில் முதன்மையானது போதுமான தண்ணீர் எடுத்துக் கொள்வதே.

பெரியவர்களுக்கு குடிக்கும் குடிநீரின் அளவு 10 நிமிடங்களுக்குள் 24-30% உடல் உறிஞ்சிக் கொள்ள ஆரம்பிக்கும். அதனால் ஒருமுறை குடிக்கும் தண்ணீரின் அளவு கிட்டதட்ட குறைந்தது 60 நிமிடங்கள் நீடிக்கும். பட்டை பொடியை சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள்.

​எடை குறைய
  • அதிக எடை கொண்ட பெண்கள் தங்களுடைய வயது மற்றும் எடைக்கு எற்ற நீரின் அளவை விடவும் குறைந்தது 1 லிட்டர் அளவுக்கு அதிகமாகக் குடிக்க வேண்டும்.
  • அப்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, ஒரு ஆண்டுக்கு கிட்டதட்ட வழக்கமாக எடை குறைவதை விட இரண்டு கிலோ அதிகமாகக் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
  • இதுவே பட்டை சேர்த்துக் கொள்வோருக்கும் இன்னும் கூடுதல் பலன் இருப்பதாகத் தெரிகிறது.
  • தேவையில்லாமல் தங்களுடைய வாழ்க்கை முறையை வேறு வகையில் ஏதும் மாற்றாமல் தண்ணீரை குடிப்பதை மட்டும் வழக்கமாக்கிக் கொண்டால், அதன் முடிவு உங்களையே பிரமிக்க வைப்பதாக இருக்கும். வழக்கத்தை விட ஒரு நாளைக்கு அரை லிட்டர் தண்ணீர் அதிகமாகக் குடித்தால், 2 கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன.
  • அதுவே ஒரு வருடத்திற்கு கிட்டதட்ட 17000 கலோரிகள். அதாவது 2 கிலோ அதிகமாகக் குறைக்க முடியும்.