தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவரின் பிறந்த நாள், திருமண நாள், பட வெளியீடு ஆகியவற்றை திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.
அதேபோல் நேற்று விஜய் – சங்கீதாவின் திருமண நாளை மதுரையில் உள்ள ரசிகர் மன்ற உறுப்பினர்கள் வித்தியாசமான போஸ்டர் அடித்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.
அந்த போஸ்டரில் மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவி என விஜய் மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும், மக்கள் இயக்கத்தின் புரட்சித்தலைவர் என விஜய்யை எம்ஜிஆர் போலவும் போஸ்டரில் சித்தரித்து இருந்ததால் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








