இலங்கையில் 130 ஆக குறைவடைந்த கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 07 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.

நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 06 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,941 இலிருந்து 2,947 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,798 இலிருந்து 2,805 ஆக

உயர்ந்துள்ளது.

நேற்று குவைத்திலிருந்து வந்த 02 பேர், சென்னையிலிருந்து வந்த 02 பேர், அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவர், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வந்த ஒருவர் ஆகிய 06 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இன்று இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அடையாளம் காணப்பட்ட 2,947 தொற்றாளர்களில், வெளிநாட்டுப் பிரஜைகள் 36 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் 1,018 பேர்

உள்ளிட்ட 1,054 பேர் அடங்குகின்றனர். அத்துடன் கடற்படையினர் 906 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 44 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 630 பேர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 313 பேரும் அடங்குகின்றனர்.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,947 பேரில் தற்போது 130 நோயாளிகள் சிகிச்சைக்கு

உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை 12 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனிடையே மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பான சந்தேகத்தில் 55 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்னர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.