சூர்யாவின் சூரரை போற்று இத்தனை கோடிகளுக்கு அமேசானில் விற்றார்களா…?

சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று.

கொரோனா காரணமாக தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது சூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆம் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் அக்டோம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது.

இந்நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் ப்ரேமில் மட்டும் ரூ 60 கோடிக்கு விற்றுள்ளார்களாம். அதோடு சாட்டிலைட் பிஸினஸ் ரூ 40 கோடியாம்.

இதன் மூலம் படம் ரிலிஸிற்கு முன்பே சூர்யாவிற்கு ரூ 100 கோடி வந்துள்ளதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.