இதுவும் கொரோனா அறிகுறி தான்.. அலட்சியம் வேண்டாம்.!

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.

கொரோனா அறிகுறியாக, மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டைப் புண் மற்றும் வயிறு வலி, காய்ச்சல், மூச்சு திணறல், வாசனை இழப்பு உள்ளிட்டவை, கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இதுவரை சொல்லப்பட்டு வந்தன.

சமீபத்தில், கொரோனா நோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளில், 50 சதவீதம் பேருக்கு செரிமானப் பிரச்சனைகள் இருந்துள்ளன. பெரும்பாலானோர் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வெறுமனே செரிமானப் பிரச்சனைகள் மட்டுமே காணப்பட்டுள்ளன. அதையடுத்து, செரிமானப் பிரச்சனையும் கொரோனா அறிகுறியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்து ஒவ்வொரு நாளும் ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவலை சேகரித்து வருகின்றனர். இந்த வகையில், தற்போது Indiana University School of Medicine நடத்திய ஆய்வில் தற்காலிக முடி கொட்டும் பிரச்சினை உருவாகி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 25 அறிகுறிகள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதில் தற்போது முடி கொட்டும் பிரச்சனை உள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களுக்கு சிகிச்சை எடுத்து வருவோருக்கு முடி கொட்டுவது இருப்பது தெரியவந்துள்ளது. இது தற்காலிகமானதுதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.