நடிகர் கமல்ஹாசனின் இந்த பிளாக் பஸ்டர் திரைப்படம் உருவாக, தல அஜித் தான் காரணமா?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தல அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான வசூல் ராஜா MBBS, திரைப்படம் உருவாக தல அஜித்தும் காரணமாக இருந்துள்ளார்.

ஆம் இயக்குனர் சரண் இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தல அஜித்தை வைத்து அட்டகாசம் திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இதனிடையே அவருக்கு வசூல் ராஜா MBBS திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது, மேலும் நடிகர் கமல் அவருக்கு மிகவும் குறைந்த நாட்களையே கால்ஷீட்டாக தந்துள்ளார்.

இதனால் இயக்குனர் சரண் 15 நாட்களுக்குள் அந்த திரைப்படத்தை ஆரம்பிக்க வேண்டும், என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதையடுத்து தல அஜித்திடம் தனது நிலையை கூறிய இயக்குனர் சரண், உடனடியாக அவரை அந்த படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் உலகநாயகனை வைத்து இயக்கும் வாய்ப்பு ஒரு தடவை தான் வரும் என தல அஜித் இயக்குனர் சரணிடம் கூறியுள்ளார்.