சியான் விக்ரம் எனும் நடிகரை திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத ஒரு பெயர் என்று கூட சொல்லலாம்.
தனது படத்திற்காக தன் உடலை வருத்தி கொண்டு நடித்து வரும் நடிகர்களில் மிகவும் முதன்மையானவர் விக்ரம்.
இவர் தற்போது இளம் இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் ரசிகர்கள் வியக்க வைக்கும் வகையில் பல விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் தனது மகனுடன் இணைந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் கொரனா தாக்கம் முடிந்த பின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் முழு சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரியுமா.. இதோ முழு விவரத்துடன்..
*சியான் விக்ரம் பயன்படுத்தும் ஆடி காரின் விலை 3.5 கோடி.
* இவரின் வீட்டின் மதிப்பு சுமார் ரு. 5 கோடி.
* தனது ஒரு படத்திற்காக விக்ரம் வாங்கும் சம்பளம் ரு. 15 கோடி.
* நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே 130 கோடி.
மேலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல, வெளிவந்த சில தகவல்களை வைத்து தொகுத்து வழங்கி இருக்கிறோம்…







