ஒன்பது குழி சக்கையா மொக்கையா விமர்சனம் இதோ !

ஒன்பது குழி சம்பத் சமீபத்தில் ரீகல் டாக்கீஸ் OTT ல் ரிலீஸ் ஆனது.

படத்தின் கதை நம் தமிழ் சினிமாவில் ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்த எதார்த்தமான முன் வந்த கதைதான்.

நாம் ஏற்கனவே பார்த்து பழகி போயிருந்த கதையாக இருந்தாலும் படத்தின் திரைக்கதை நம்மை புதுமையாக உணர வைத்தது. படத்தின் நாயகன் சம்பத் ஒரு பொறுப்பற்ற முரட்டு இளைஞனாக தன் நண்பர்களுடன் கிராமத்தில் வாழ்ந்து வரும் ஒரு நபர்.

அவனை யாருக்கும் பிடிக்காது அவனது தாய் கூட அவனிடம் 14 வருடங்கள் பேசாமல் இருப்பார். படத்தில் சம்பத்தின் நண்பராக சாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்புக்குட்டி மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக திகழ்ந்தார். அத்துடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்.

இப்படிப்பட்ட ஒரு முரட்டுத்தனமான ஒரு பொறுப்பற்ற இளைஞனுக்கு காதல் வருகிறது அந்த காதல் இவனது வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றுகிறது என்பதை மிக சுவாரஸ்யமாக கதையை நகர்த்துகிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவாளர் மிக எதார்த்தமாக திருச்சி நகரை ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இசையும் இந்த படத்திற்கு நல்ல உறுதுணையாக இருந்தது.

படத்தில் அங்கங்கே சில ஸ்லோவா காட்சிகள் இருந்தாலும் ஒரு சில நல்ல நல்ல ஒரு கதை திருப்பங்களுடன் உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ் காட்சி மனதிற்கு பாசிட்டிவ் பீலிங் கொடுக்கிறது.