விஜய், கமல் பட நடிகருக்கு கல்யாணம்!

தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருப்பவர் விஜய். அவருடன் பணியாற்றுவதில் பலருக்கும் பெரும் ஆனந்தம். வாய்ப்பு கிடைக்காதா என ஏங்குபவர்களும் உண்டு.

மலையாள சினிமாவில் நடிகர்களும், நடிகைகளும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் பைரவா படத்தில் நடித்தவர் ரோஷன் பஷிர். கமல் ஹாசனுடன் பாபநாசம் படத்திலும் வில்லனாக ரோஷன் நடித்திருந்தார்.

மலையாள சினிமா நடிகரான இவருக்கு ஃபர்ஸானா என்பவருடன் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது கொரோனா ஊரடங்கு போன்ற சிக்கல்களால் திருமணத்தை எளிமையாக நேற்று நடத்தி முடித்துள்ளார்.

முக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். பலரும் சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்ட புகைப்படத்தின் கீழ் வாழ்த்துக்கள் பதிவிட்டுள்ளனர்.

மணமகள் ஃபர்ஸானா மற்றும் மணமகன் ரோஷன் பஷிர் புகைப்படங்கள் இதோ…

 

View this post on Instagram

 

16-08-2020?

A post shared by Roshan Basheer (@roshan_rb) on