தற்போது நடைபெற இருக்கும் 2021 தமிழக தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட போவதில்லை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்கள் உலக நாயகன் கமல் ஹாஸன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவ்விருவரும் தற்போது தங்களது தமிழக அரசியல் பயணத்தில் பெரும் ஈடுபாட்டை காட்டி தமிழக மக்களை கவர்ந்து வருகின்றனர்.

மேலும் ரஜினிகாந்த் வரும் தமிழக சட்ட தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் நான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கமல் மற்றும் ரஜினியை தொடர்ந்து தளபதி விஜய் தனக்கென்று புதிய கட்சியை துவங்க போகிறார்.

ஆம் இதற்காக டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களின் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம் நடிகர் விஜய். மேலும் இந்த கட்சியின் அறிவிப்பு இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வெளிவரும் என கூறப்படுகிறது.

மேலும் தற்போது நடைபெற இருக்கும் 2021 தமிழக தேர்தலில் விஜய் போட்டியிட போவதில்லை. அதன்பின் வரவிருக்கும் 2026 தமிழக தேர்தலில் தான் விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அறிந்த பலருக்கும் ஷாக் தான்.