மோசமான கமெண்ட், கிண்டலுக்கு கீர்த்தி சுரேஷ் பதிலடி

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் தெலுங்கில் வந்த மகாநடி என்ற படத்தின் மூலம் உச்சம் சென்றார்.

அந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கூட கிடைத்தது, இந்நிலையில் கீர்த்தியை தொடர்ந்து ஒரு கும்பல் கேலி, கிண்டல் செய்து தான் வருகிறது.

இதுக்குறித்து கீர்த்தியிடம் கேட்ட போது, ‘ஆரம்பத்தில் நானும் அதை ரசித்தேன், ஜாலியாக பார்த்து கடந்துவிடுவேன்.

ஆனால், காலப்போக்கில் அது டார்க்கெட் செய்து செய்கிறார்கள் என்று புரிந்தது, ஆனாலும் நான் அதை கண்டுக்கொள்வது இல்லை.

அதற்கெல்லாம் இடம் கொடுத்தால் நாம் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு போக முடியாது, என் வேலை படங்களில் நடிப்பது’ என்பது போல் பதிலடி கொடுத்துள்ளார்.