மீரா மிதுன் அடாவடி பேச்சால் அறிக்கை விட்ட பாரதிராஜா !

தமிழ் சினிமாவில் மாஃபியா கும்பல் உள்ளது என்று சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த மாஃபியா கும்பல் விஜய் மற்றும் SAC , சூர்யா மற்றும் சிவகுமார் குடும்பத்தினர் என்று தெரிவித்து இருந்தார். இவர் அடிக்கடி போடும் ட்வீட் விஜய் மற்றும் சூர்யாவை தாக்கியே இருந்தது. உடனே ரசிகர்கள் மீராவை திட்ட ஆரம்பித்தனர்.

“தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் தான் நடித்து இருந்த காட்சிகளை சூர்யா தான் நீக்க சொல்லி இருக்கிறார். எப்படி இது போல செய்யலாம் என்று மீரா பதிவு செய்து சூர்யாவையும் , விஜயையும் மாற்றி மாற்றி குறை சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் கடும் கோபத்தில் ரசிகர்கள் மீராவிற்கு எதிராக குரல் கொடுக்கத்தொடங்கினர். அது மட்டும் அல்லாமல் விஜயின் மனைவி சங்கீதா அவர்களையும் , சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும் கொச்சை வார்த்தைகள் பயன்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனால் ரசிகர்கள் கோபப்பட்டு மீராவிற்கு எதிராக வீடியோ வெளியிட்டு வந்தனர். மீரா எங்கு இருந்தாலும் சட்டப்படி நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்று சூர்யா மற்றும் விஜய் ரசிகர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்து வருகின்றனர்.

மீராவின் கருத்துக்கு அனைவரும் பதிலடி கொடுத்து வந்தனர் திரை உலகத்தினர். சற்று நேரத்திற்கு முன் இயக்குனர்களின் முன்னோடி பாரதிராஜா மீரா மிதுனை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். திரை உலகில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் நடிகரான சூர்யா மற்றும் விஜயை இப்படி பேசுவது தவறு என்றும். ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

உடனே அதற்கு மீரா மிதுன் பின் எதற்கு சார் “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் இருந்து என்னை நீக்கினீங்க. நீங்கள் தான் என்னை நீக்க சொல்லி அழுத்தம் கொடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் கூறி உள்ளார் என்று திரும்ப கேட்டு உள்ளார். இவர்களை தொடர்ந்து சனம் ஷெட்டி, ஷாலு சம்மு போன்ற நடிகைகள் மீது சட்டப்படி நடவெடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.