பேஸ்புக்கின் தீர்மானத்தில் அதிரடி மாற்றம்

கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலால் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது பணியாளர்களை வீட்டிலிருந்துவாறு பணியாற்றுமாறு கேட்டிருந்தது.

எனினும் இந்த மாதம் முதல் மீண்டும் அலுவலங்களில் பணியாற்ற முடியும் என முன்னர் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போதுவரை உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை.

இதனால் வீட்டிலிருந்து பணியாற்றும் காலத்தை மேலும் நீடித்துள்ளது பேஸ்புக்.

இதன்படி எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரை பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற முடியும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கூகுள் நிறுவனமும் இவ்வாறு கால நீடிப்பை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.