இரவு நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா?

இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத பழங்களுள் ஒன்றாக வாழைப்பழம் சொல்லப்படுகிறது. வாழைப்பழம், மிகவும் சத்தான பழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உடலுக்கு ஏற்ற பழமாகும். ஆனால், இந்த வாழைப்பழம் சிறந்த ஆற்றல் உணவாக கருதப்படுகிறது என்பது தெரியுமா? அதோடு, வாழைப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சோகையை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வாழைப்பழத்தின் நன்மைகள்:

வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்க உதவுவதோடு, அதைக் குறைக்கவும் உதவுகிறது. உடலுக்கு பல சத்துக்களை அளிக்கிறது. இதயம் மற்றும் கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் ட்ரிப்டோபன், வைட்டமின் பி6, வைட்டமின் பி போன்றவையும் வாழைப்பழத்தில் உள்ளன. இருப்பினும், இந்த பழம் இரவு நேரத்தில் சாப்பிட ஏற்றதாக கருதப்படவில்லை.

ஆனால் உண்மையில் இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த நன்மைகளைக் காண்போம். நல்ல தூக்கம், அமிலக் கட்டுப்பாடு, உடல் பருமனைக் குறைக்க உதவும். ஸ்வீட் மீதான ஏக்கத்தைத் தணிக்கும்.

ஊட்டச்சத்து நிபுணரான சிம்ரன் சைனி கருத்துப்படி, வாழைப்பழம் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஆற்றல்மிக்க பழமாகும். மேலும் இதை சளி மற்றும் இருமல், ஆஸ்துமா அல்லது சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், மற்றவர்கள் மாலையில் ஜிம் சென்று வந்த பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இரவு தூங்குவதற்கு எவ்வளவு காலம் முன்பு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்? வாழைப்பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் நல்ல தூக்கத்தை வழங்கக்கூடியவை. அத்தகைய வாழைப்பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடத் தவிர்ப்பது என்பது ஒரு நல்ல யோசனையாக இருக்காது. ஆனால், ஆஸ்துமா, சைனஸ், சளி மற்றும் இருமல் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் வாழைப்பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.