நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நாள்தோறும் புதிய திருப்பங்கள் வந்து ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தற்போது, கடந்த ஜூன் மாதம் 9-ஆம் தேதியில் இருந்து 14-ஆம் தேதி வரை ஒரே வாரத்தில் 14 சிம் கார்டுகளை மாற்றியுள்ளதாக விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுஷாந்த் சிங் பயன்படுத்திய சிம் கார்டுகள் எதுவும் அவரது பெயரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.
மேலும், அவற்றில் ஒன்று அவருடைய நண்பரான நடிகர் சித்தார்த் பிதானியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சுஷாந்துக்கு உதவிய நண்பருக்கு ஏதுவும் சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனையடுத்து சுஷாந்த் சிங் அச்சுறுத்தலினால் இத்தனை சிம் கார்டுகளை மாற்றியிருக்கலாம் என்றும், அவரது நண்பரின் பெயரில் சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் வீட்டில் ஒரு வருடத்திற்கு முன்பு சமையல்காரராக இருந்த அசோக் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”நான் அவரிடம் இருந்த போது, அவர் சந்தோஷமான மனிதராக இருந்தார். அவர் எந்த மன அழுத்தத்திலும் இல்லை. எந்த மருந்துகளும் எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல அப்போது அவருக்கும் ரியாவுக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை. அனைத்தும் சகஜமாகவே இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சுஷாந்த தற்கொலை செய்து கொண்ட நாளில் வேலை பார்த்த சமையல்காரர் நீரஜ் தெரிவித்துள்ள கருத்தில், இறப்பதற்கு முந்தைய நாள் இரவு, இரவு சாப்பிட என்ன வேண்டும் என கேட்ட போது மேங்கோ ஷேக் போதும் என கூறினார்.
காலை உணவை கேட்ட போது ஆரஞ்ச் ஜூஸ், இளநீர், வாழைப்பழம் போது என தெரிவித்தார்.
பிறகு மதிய உணவை பற்றி கேட்க கதவை தட்டியபோது, கதவு திறக்கவில்லை, பிறகு திறந்து பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டு, இயற்கை எய்தியிருந்தார். ஆனால், ரியா மற்றும் சுஷாந்த் ஐரோப்பா சுற்றுலாவுக்கு பிறகுதான் சுஷாந்த் நார்மலாக இல்லை எனவும் அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.







