பிகில் படம் செய்த பெரும் சாதனை!

விஜய் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான படம் பிகில். விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் என மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை நாம் பார்த்திருப்போம் தானே.

ரூ 300 கோடியை கடந்து வசூல் செய்ததை அனைவரும் அறிவோம். அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படத்தில் காயத்திரி ரெட்டி, இந்திரஜா, நயன்தாரா, ரெபா மோனிகா என பலர் நடித்திருந்தனர்.

தற்போது பிகில் படம் சன் டிவியில் திரையிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே இப்படம் மற்ற சானல்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

அதுவும் இந்த லாக் டவுன் காலத்தில் இப்படம் 170 முறை டிவி சானல்களில் ஒளிபரப்பப்பட்டுள்ளதாம்.

  • சன் தொலைக்காட்சி – 50
  • ஜெயா – 66
  • விஜய் – 18
  • ஜீ தமிழ் – 9
  • கலைஞர் – 9
  • மற்ற சானல்கள் – 18