தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அர்ஜுன். இவரின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழ் சினிமாவிற்கு பட்டத்துயானை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் சில தினங்களுக்கு முன் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்து இருந்தார்.
அதற்கு முன் இவரின் உறவினர் மற்றும் பிரபல கன்னட நடிகரான துருவ் சர்ஜா அவரின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர்.
அதன்பின் இவர்கள் இருவரும் கொரோனவிலிருந்து மீண்டதாகவும், கொரோனா நெகடிவ் என முடிவு வந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஐஸ்வர்யா அர்ஜுனும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.
மேலும் அவர் தான் கொரோனா நெகடிவ் எனவும் தனக்காக பிராத்தனை செய்தவர்களுக்கு மிகவும் நன்றி எனவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.







