பாகுபலி படத்தின் முக்கிய புள்ளிக்கு கொரோனா.. அதிர்ச்சியில் திரையுலகம்

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் ஏழை எளிய மக்களில் இருந்து, பணக்கார செல்வந்தர்களையும், மக்களுக்காக பணியாற்றும் அதிகாரிகளையும் தொடர்ந்து பாதித்து வருகிறது. இதனால் பலதரப்பில் தொடர் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாகுபலி என்ற திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த இந்திய திரையுலகம் மட்டுமல்லாது உலக திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி.. இவர் பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் தமிழக மக்களால் வெகுவாக கவரப்பட்டார்.

இந்நிலையில், பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவர்களின் குடும்பத்தினருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில், கொரோனா உறுதியாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாங்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.