வனிதாவுக்கு நோட்டீஸ் விட்ட பிரபல நடிகை!

வனிதா பீட்டர் பால் திருமண விவகாரம் கடந்த சில நாட்களாக மிகுந்த சர்ச்சையானது. இணையதள ஊடகங்களில் மிகுந்த சர்ச்சையானது.

இவ்விசயத்தில் கருத்து தெரிவித்த நடிகை லட்சுமி ராதாகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருடன் வனிதாவுக்கு வாக்குவாதமானது.

மேலும் பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் அடுக்கடுக்காக காவல் நிலையத்தில் பல புகார்களை எடுத்துவைத்துள்ளார்.

இத்துடன் சூரியா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோருடன் வனிதாவுக்கு மோதல் ஏற்பட்டது.

நேர்காணலில் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா தரக்குறைவாகவும் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் லட்சுமியும் அவரின் கணவரும் வனிதாவை பேச்சு வார்த்தைக்கு அழைத்து நோட்டீஸ் விட்டுள்ளார்.