இந்திய இளைஞன் இலங்கையில் எடுத்த விபரீத முடிவு

வெள்ளவத்தை, மயூரா வீதியின் பின்புறத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று (23) மாலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

உயிரிழந்தவர் 25 வயதான இந்திய பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசேதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.