ஒரு வழியாக சிம்பு படத்திற்கு அப்டேட் வந்துவிட்டது, இதோ

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்து கொண்டிருக்கும் படம் மாநாடு.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தன நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நின்றுள்ளது.

சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் மாநாடு.

மேலும் சமீபத்தில் சிம்புவின் ரசிகர்கள் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி யிடம் சமூக வலைதளங்களில் அப்டேட் கேட்டு வந்துள்ளனர்.

இதற்காக தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து பதிலளித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

இதில் அவர் கூறியது : கொரானா ஊரடங்கு காரணமாக வெள்ளித்திரை படப்பிடிப்புகள் துவங்க அரசாங்கம் அனுமதி இன்னும் தரவில்லை.

அரசாகம் கிரீன் சிக்னல் காட்டிவிடால் மாநாடு படத்தின் படப்பிடிப்பு உடனடியாக துவங்கும் என தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.