ஐசிசியின் அறிவிப்பால் ஒளிப்பரப்பாளர்கள் அதிருப்தி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரையில் ஐபிஎல் 2020 தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு ஐபிஎல் ஒளிபரப்பாளரான ஸ்டார் இந்தியா அதிருப்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் தீபாவளி வரும் திகதியையொட்டி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் மட்டுமே தங்களால் அதிகளவில் விளம்பரங்கள் வரும் என்று கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த 44 நாட்களில் 60 போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் அதிகமான மதிய நேர போட்டிகள் நடத்தப்படும் என்பதால் தங்களது பார்வையாளர்கள் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது.