இந்தி பட நடிகரான சுஷாந்த் சிங் சென்ற மாதம் மும்பையில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ரசிகர்கள் பலரும் பாலிவுட்டில் இருக்கும் சினிமா வாரிசு அரசியல் தான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம் என்று கூறினர். இதுகுறித்த விசாரணையை மும்பை போலீஸ் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், ஸ்டீவ் ஹப் என்பவர், யூட்யூபில் சுஷாந்த் சிங் ஆவியுடன் பேசியதாக கூறி இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றார். அதில் சுஷாந்தின் குரல் என்று கூறப்பட்ட குரல், சுசாந்தியின் குரல் போலவே இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த குரல், ‘நான் நன்றாக இருக்கிறேன். சில ஆண்களுடன் பெரிய வாக்குவாதம் நடைபெற்றது. அவர்கள் நகங்களை கொண்டு வந்தார்கள். அது இப்போதுதான் முடிந்தது.’ என்று பேசுகிறது. இந்த வீடியோவானது தற்போது, இணையத்தில் வைரலாகி வருகின்றது. மீண்டும் ரசிகர்களிடம் இந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








