சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்காகவே என்பதற்காக ஓடி வசூல் செய்யக்கூடிய படங்கள் உண்டு. இப்போதெல்லாம் சினிமாவில் டிஜிட்டல் சாதனைகள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.
இது விளம்பரத்திற்காக செய்யக்கூடிய யுக்தியும் கூட. அந்த வகையில் படங்களின் பாடல்கள், லிரிக் வீடியோ, டீசர், டிரைலர், ஸ்னீக் பீக் என தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அவை லட்சக்கணக்கான பார்வைகளையும் பெறுகின்றன.
அதே வேளையில் படங்களும் அதிகாரப்பூர்வமாக Youtube ல் வெளியிடப்படுவதுண்டு. இவையும் மிகுந்த வரவேற்பை பெறுகின்றன.
இந்நிலையில் தெலுங்கு சினிமா நடிகர் அல்லு அர்ஜூன், ரகுல் பிரீத் சிங், கேத்ரீன் தெரசா ஆகியோர் நடிப்பில் உருவான சரைநோடு படம் போயபதி சீனு இயக்கத்தில் கடந்த 2016 ல் வெளியிடப்பட்டது.
தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு Youtube ல்லும் வெளியிடப்பட்டது. இதில் முதல் முறையாக 30 கோடி முறை பார்க்கப்பட்ட முதல் இந்தியப்படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இதனை ரசிகர்கள் #Sarrainodu300MillionViews என டேக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.







