அப்பாவுக்கு 4 மனைவிகள்!… நடிகர் பொன்னம்பலத்தை பற்றிய ரகசியங்கள் தெரியுமா?

பிரபல திரைப்பட நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் திரைக்கு வந்தது, குடும்ப பின்னணி குறித்து பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர் என்று கூறியதுமே நினைவுக்கு வருபவர்களில் ஒருவர் நடிகர் பொன்னம்பலம்.

இவர் ரஜினி, கமல், அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து பிரபலமானவர்.

தற்போது வயது முதிர்வு காரணமாக முரட்டு தனமான வில்லத்தனம் உள்ள படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.