வனிதாவை பழிவாங்கும் செயல்! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரப்பாக பேசப்படுவது வனிதா, பீட்டர் பால் திருமண சர்ச்சை தான். பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் நீதி கேட்டு போராடி வருகிறார்.

இவ்விசயத்தில் சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவிக்க அதுவும் வார்த்தை மோதல்களாகி வருகிறது. இந்நிலையில் வனிதா பங்கேற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர்.

வனிதா திருமணம் விசயத்தில் அவரும் மரியாதையுடன் தனது கருத்தை பகிர்ந்திருந்தார். ஆனால் ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் வனிதாவுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் தான் இப்படி பேசுகிறார் என கூறிவந்தனர்.

இந்நிலையில் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் வனிதாவுடன் எந்த கசப்பான அனுபவமும் இல்லை. நான் அவரை விலக்க தான் முயற்சி செய்தேன். அவருடன் மோசமாக சண்டையிட விரும்பவில்லை. எனக்கு அது ஒன்றும் தேவையில்லை.

வனிதாவின் சொந்த விசயமாக இருந்தாலும் அவரை சிலர் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். அது சரியானதல்ல, நான் அப்படியான தனிப்பட்ட தாக்குதலுக்கு உடனிற்கமாட்டேன், அப்படி செய்யவும் கூடாது.

வனிதாவுடன் எனக்கு தனிப்பட்ட மோதலும் கிடையாது. அவரின் பேரை அங்கும் இங்கும் சொல்லவும் விரும்பவில்லை. நேர்காணலில் கூட அவரை பற்றி பேசும் போது மரியாதையுடன் தான் பேசினேன். ஆனால் அவர் மீதான தரக்குறைவான வார்தைகளையும் கேள்விகளையும் ஏற்கமுடியாது எனவும் கஸ்தூரி கூறியுள்ளார்.