தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றது. இப்படத்தில் நடிகை அமலாபால் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். பாடலும், காட்சிகளும், வசனங்கள் வேலையில்லாத பட்டதாரிகள் பலரை கவர்ந்தன.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவர் ஆர்.வேல்ராஜ். தங்க மகன் படத்திலும் தனுஷுடன் பணியாற்றியுள்ளார். மேலும் இரண்டு படங்களிலும் வேல்ராஜ் பணியாற்றியுள்ளாராம்.
இந்நிலையில் வேல்ராஜின் தந்தை நேற்று அதிகாலை 1.45 மணியளவில் வயது முதிர்வால் சொந்த ஊரான மதுரை கூத்தியார் குண்டு இல்லத்தில் காலமானாராம்.
99 வயதான அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றுள்ளது. அவரின் மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.