தளபதியின் படத்தில் பிரபல நடிகரின் அப்பா! புகைப்படத்துடன் வெளியான சேதி – பலருக்கும் தெரியாத ரகசியம்

ஒட்டு மொத்த தளபதி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். கொரோனாவால் தள்ளிப்போன இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான படம் பிகில். அட்லீ இயக்கத்தில் விஜய்யுடன் கால்பந்து அணியில் நடித்தவர் கதிர். இப்படத்தினால் கதிரின் கதாபாத்திரத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கதிரின் அப்பா மாஸ்டர் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தன் அப்பாவின் பிறந்தநாளில் ரகசியத்தை வெளியிட்டுள்ளார் கதிர்.

மேலும் பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளனின் தந்தையும் மாஸ்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.