பிரபல இயக்குனர் மரணம்!

உலகில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 92 லட்சம் பேரை பாதிப்படையச்செய்துள்ளது. இந்நோய் 4.76 லட்சம் பேரை உயிர் பலி கண்டுள்ளது.

அமெரிக்காவிலும் இந்நோய் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த சில பிரபலங்கள் மரணம் அடைந்துள்ளனர்.

தற்போது பேட்மேன் படத்தின் இயக்குனர் ஷுமேக்கர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அவருக்கு வயது 80. ஸ்லீப்பர் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி, கதாசிரியராகவும் பணிபுரிந்த ஷுமேக்கர் தி இன்கிரடிபிள் ஷ்ரிங்கிங் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார்.

அவரின் மறைக்கு ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.