குருதி அமுக்கத்தினை கணிக்க சாம்சுங் அறிமுகம் செய்யும் புதிய அப்பிளிக்கேஷன்

உடல் ஆரோக்கியத்தினை கண்காணிக்க சாம்சுங் நிறுவனம் பல்வேறு அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது குருதி அமுக்கத்தினை கணிக்கக்கூடிய மற்றுமொரு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது Galaxy Watch Ative2 எனும் கடிகாரத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

ஆனாலும் தென்கொரியாவில் மாத்திரமே தற்போது குறித்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த அப்பிளிக்கேஷனில் விரைவில் Electrocardiogram (ECG) ட்ராக் செய்யும் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்படும் என சாம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனேகமான இவ் வருடத்தின் மூன்றாம் காலாண்டில் இவ் வசதி தரப்படலாம் என நம்பப்படுகின்றது.