அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அதிரடியான காமெடி.!!

அமெரிக்க நாட்டில் நவம்பர் மாதத்தில் 3 ஆம் தேதியன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசு கட்சியின் சார்பாக டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இப்போது கொரோனா வைரஸ் பரவலும் கடுமையான அளவு அதிகரித்துள்ள நிலையில், நேற்று ஒக்கலொஹாமா மாகாணத்தில் இருக்கும் துல்ஷா நகரில் ஜனாதிபதி ட்ரம்ப் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தார்.

இதில், சீனாவில் இருந்து கொரோனா வந்ததற்கு குங்புளு என்ற பெயரை கொண்டு கொரோனாவை அழைத்தார். மேலும், கொரோனா வைரஸிற்கு சீனா தான் காரணம் என்றும், கொரோனா என்பது தொற்று நோயாகும். இதனை பல்வேறு பெயர்களால் அழைக்கலாம். கொரோனவை நான் குங் புளூ என்று அழைப்பேன். இதனை தவிர்த்து 19 பெயர்களை வெளியிட்டு அறிவிப்பேன்.

கொரோனா பரிசோதனை என்பது இரண்டு பக்கமும் கூர்மையான வாழ் ஆகும். இதன் மோசமான பகுதியே பரிசோதனை தான். பரிசோதனையை அதிகப்படுத்தினால் கொரோனாவால் பாதித்தவர்களை கண்டறிய இயலும். பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளித்து குறைக்க இயலும்.