ஜீரண கோளாறுகளை சரிசெய்து, நார்ச்சத்தை வழங்கி கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது கடுகு அதில் சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடுகு – 20 கிராம்
பச்சரிசி – நான்கு ஆழாக்கு
கடலைப்பருப்பு – 40 கிராம்
மிளகாய் வற்றல் – 20
பெருங்காயத்துள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – சிறிதளவு
நல்லெண்ணெய் – 20 கிராம்
தேங்காய் துருவல் – 100 கிராம்
புளி – பெரிய எலுமிச்சம்பழம் அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு.
செய்முறை:
அரிசியை சாதமாக வடித்து ஒட்டாத பக்குவத்தில் இறக்கி தட்டில் கொட்டி ஆற வைத்து கொள்ளவும்.
வெறும் கடாயில் கடுகை போட்டு வெடித்தவுடன் இறக்கி வைத்துகொள்ளவும்.
மிளகாய் வற்றல், வறுத்த கடுகு, தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, புளி, உப்பு இவற்றை வைத்து வெண்ணெய் போல அரைத்து சாதத்தில் நன்றாக கலக்கவும்
பிறகு நல்லெண்ணையை வாணலியில் விட்டு சூடானதும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு இவற்றைத் தாளித்து பின்னர் அதில் சாதத்தை கொட்டி நன்றாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.
சூடான, சுவையான கடுகு சாதம் ரெடி.