பிரபல நடிகர் சுஷாந்த் மரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மறைமுக பதிலடி

சுஷாந்த் இழப்பு ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எல்லோரும் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சுஷாந்த் இந்த நிலைக்கு காரணம் பலரும் பாலிவுட்டில் நடக்கும் நெப்பிடியூசம் தான் என்கின்றனர்.

அப்படியென்றால் பெரிய நடிகர், நடிகை, இயக்குனர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் சினிமாவில் நடிக்க வைப்பார்கள்.

தானாக வருபவர்களை நசுக்குவார்கள், அப்படித்தான் சுஷாந்தை செய்துவிட்டனர் என கூறுகின்றனர்.

தற்போது ரகுமான் மறைமுகமாக ‘உங்களுக்கு இந்த இடமாவது நல்ல இடமாக அமையட்டும்’ என பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.