மாஸ்டர் பட நடிகரை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் சாந்தனு. இப்படத்தின் வெற்றி அவரின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒரு விஜய் ரசிகனாக காத்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் அவர் தொடர்ந்து பதிவிடுவதுண்டு. சில சர்ச்சைகளும் அவருக்கு வந்துள்ளன.

இந்நிலையில் அவர் தன் முக்கிய நண்பர் ஒருவரை இழந்துள்ளாராம். இதுகுறித்து பதிவில் மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். இளமை, ஆரோக்கியத்துடன் இருந்தவருக்கு எப்படி இப்படி நடந்தது. அதற்கு காரணம் மன அழுத்தம் தான். பல விசயங்களால் உண்டாகும் மன அழுத்தம் நம் உயிரை பறித்துவிடுகிறது. மன அழுத்தம், எதிர்மறை, வெறுப்பால் எந்த ம*** பிரயோஜனமும் இல்லை. அடுத்த நிமிடம் நடக்கப்போவது என்ன என்பதை கணிக்க முடியாது என மனவேதனையுடன் பதிவிட்டுள்ளார்.