மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவி செய்யும் நாய்!

மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு நாய் உதவி செய்யும் காணொளி ஒன்றினை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த இணையவாசிகள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மாற்று திறனாளி சிறுவனின் சக்கர நாற்காலியை நாய் ஒன்று அழகாக தள்ளிச் செல்கின்றது.


மனிதர்கள் நடமாடும் கூட்டமான பகுதியில் எவ்வித அச்சமுமின்றி மாற்றுத்திறனாளிக்கு உதவி செய்யும் நாயின் செயல் பாராட்டைப்பெற்றுள்ளது.

நாய்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள நட்பை இந்த வீடியோ தெளிவாக உணர்த்துகின்றது.