உலகின் அடுத்த விலையுயர்ந்த விவாகரத்து..!!

இவ்வுலவின் மிகவும் விலையுர்ந்த விவகாரத்தாக அமேசான் நிறுவனர் ஜெப் மற்றும் மெக்கன்சி பெஸோஸ் விவாகரத்து இருந்து வருகிறது. இதில் ஜெப் தனது பங்குகளில் 4 விழுக்காடு பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கியிருந்தார். இதன் மூலமாக மெக்கன்சி சுமார் 48 மில்லியன் டாலர் சொத்துக்களை பெற்று, உலகளவில் நான்காவது பெண்மணியாக இருந்து வருகிறார்.

இதனைப்போல சீனாவில் நடைபெற்றுள்ள விஷயம் வெளிவந்துள்ளது. சீன நாட்டில் உள்ள காங்கிடாய் உயிரியல் தயாரிப்பு நிறுவனத் தலைவர் டூ வீமன். இவரது மனைவி யுவான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ள நிலையில், தனது முன்னாள் மனைவிக்கு 161.3 மில்லியன் டாலர் பங்குகளை மாற்றி கொடுத்துள்ளார்.

இதன் இந்திய மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி ஆகும். மேலும், கடந்த மே 29 அம தேதியன்று வெளியான தகவலின் அடிப்படையில், யுவான் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். யுவான் வணிக மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார். இவருக்கு 49 வயது ஆகும் நிலையில், இவருக்கென நேரடி பங்குகளும் இருக்கிறது.