Google Docs அப்பிளிக்கேஷனில் குறுகிய இணைய முகவரியை பெறுவது எப்படி?

இணையத்தள முகவரிகளை சமூகவலைத்தளங்கள் உட்பட பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துவருகின்றனர்.

சில இணையப்பக்கங்களின் முகவரிகள் மிகவும் நீளமாகக் காணப்படும்.

இதனை குறுகிய இணைய முகவரியாக (Shorten URL) மாற்றி பயன்படுத்துவது வழக்கமாகும்.

இவ்வாறு நீண்ட இணைய முகவரியை குறுகிய முகவரியாக Google Docs அப்பிளிக்கேஷனிலும் மாற்ற முடியும்.

இதற்கு நீண்ட இணையத்தள முகவரியை Google Docs இல் உட்புகுத்தி ஹைலைட் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் Add-ons எனும் பகுதிக்கு சென்று அங்கு URL Shortner என்பதை கிளிக் செய்து Shortend and replace the Selected URL என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

சிறிது நேரத்தில் நீண்ட இணைய முகவரியானது குறுகிய இணைய முகவரியாக மாற்றப்பட்டுவிடும்.

எனினும் சில சமயங்களில் Add-ons பகுதியில் URL Shortner நீட்சியை நிறுவ வேண்டியிருக்கும்.

இதற்கு Add-ons பகுதிக்கு சென்று Get add-ons என்பதை கிளிக் செய்து URL Shortner என தேடி குறித்த நீட்சியை நிறுவவும்.

குறிப்பு : goo.gl எனப்படும் URL Shortner சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இதற்கு பதிலாக bit.ly எனும் URL Shortner சேவையை பயன்படுத்தலாம்.