கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் 14 நாட்கள் கட்டாய தனிமை படுத்துதல்!

கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஒரு தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் போட்டிக்கு முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளும் பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அப்போது அவர்களிடம் உடல் வெப்ப நிலை பரிசோதனை, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு அணியிலும் தலைமை மருத்துவ அதிகாரி இருப்பார்.

அரசின் விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும், பயிற்சி மற்றும் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கான உயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு இவர் பொறுப்பாவார்.

பயிற்சியின்போது வீரர்கள் இடையில் ஓய்வுக்காக வெளியே செல்ல அனுமதி கிடையாது.

வீரர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்களுக்கு வழங்க அனுமதியில்லை.

வீரர்கள் மற்றும் நடுவர்கள் கிரிக்கெட் களத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நடுவர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.