சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி..!!

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் அரங்கிற்குள் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தலத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது.

கிராம பகுதியில் பொது இடத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களிடம் உரிய முன் அனுமதி பெற்ற சின்னத்திரை படப்பிடிப்பு அனுமதி வழங்கப்படும். சுமார் 20 பணியாளர்கள் மட்டுமே பணியாற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாநகர் பகுதி மற்றும் கொரோனா தடுப்பு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த தடை விதிப்பட்டுள்ளது. பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்று என்றும், நடிகர்கள் நடிக்கும் நேரத்தை தவித்து, பிற நேரத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

இதனைப்போன்று படப்பிடிப்பிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள் அவ்வப்போது கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.