சிம்புவின் மனைவிக்காக காத்திருக்கிறேன்! பிரபல பிக் பாஸ் நடிகை

இந்த கொரோனா ஊரடங்கில் பல நடிகர் மற்றும் நடிகைகள் வீட்டு வேலைகள் செய்வதை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சிம்பு சமையல் செய்யும் வீடியோ ஒன்று தற்போது டுவிட்டரில் வெளிவந்துள்ளது. அதில் பேசிய சிம்பு என் மனைவியை நான் அடிமையாக நடத்தமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதற்கு பிரபல பிக் பாஸ் நடிகை பிந்து மாதவி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடீயோவை பதவி செய்து, சிம்புவின் மனைவிக்காக காத்திருக்கிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.