நடிகை மீனாவை கேலி கிண்டல் செய்த பிரபல நடிகர்!

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க வந்தவர். பின் ஸ்டார் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து உச்ச ஹீரோயினாக இருந்தவர்.

பின் குடும்பம், குழந்தை என சினிமாவை விட்டு சில வருடம் விலகி இருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக அடுத்ததாக சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினி அங்கிள் ரஜினி அங்கிள் என குழந்தையாக மீனா அழைத்து அனைவருக்கும் நினைவிருக்கும் தானே.

இப்படத்தில் அம்பிகா மீது பால் ஊற்றும் காட்சி, ரஜினிகாந்த் சாக்லேட் கொடுக்கும் போது, அதை கடித்து துப்பும் காட்சி ஆகியவற்றை மீனா சமூக வலைதளத்தில் நினைவு கூர்ந்தார்.

பின் தன்னுடைய அம்மாவிடம் ரஜினி, நீங்கள் எந்த கடையில் அரிசி வாங்குகிறீர்கள் என்று என கேலி செய்ததாக கூறியுள்ளார். இதுவரை சொல்லா இந்த விசயத்தை மீனா முதன் முறையாக கூறியுள்ளார்.