ஆளே அடையாளம் தெரியாமல் வயதான தோற்றத்தில் மாறிப்போன தோனி..

கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் தோனி எந்த தொடரிலும் கிரிக்கெட் ஆடவில்லை. ஆனாலும், அவர் மீதான ரசிகர்களின் மோகம் எள்ளளவும் குறையவில்லை. தோனி அடுத்து எப்போது கிரிக்கெட் ஆடுவார் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

2020 ஐ.பி.எல் தொடரில் தோனி ஆட இருந்தார். அதற்காக தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால், தோனி மீண்டும் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தோனி கிரிக்கெட் ஆடியே பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், அவ்வப்போது தோனியின் குடும்பத்தினர், நண்பர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமே அவரது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற தாடியுடன், வயதான தோற்றத்தில், சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இதை கிண்டல் செய்து பல மீம்ஸ்களும் வெளியாகி வருகின்றன.