கே.ஜி.எப் இப்படத்தின் வெற்றி மற்றும் ரீச் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
தற்போது அனைவரும் எதிர்ப்பார்ப்பது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான். ஆம், இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து இப்படத்தின் நாயகன் யாஷ் அடுத்து என்ன படம் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது.
இந்நிலையில் கன்னடத்தில் மெகா ஹிட் ஆன முப்டி படத்தின் இயக்குனர் யாஷிடம் ஒரு கதை கூறியுள்ளாராம்.
அந்த கதை யாஷுக்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுவது. பெரும்பாலும், இவருடைய இயக்கத்தில் தான் நடிப்பார் என தெரிகிறது.








