பொலிஸில் சிம்பு பட நடிகை பரபரப்பு புகார்

மயிலிறகே மயிலிறகே என்ற பாடலை கேட்டதும் பலருக்கும் நினைவுக்கு வருவது அன்பே ஆருயிரே படம் தான்.

எஸ்.ஜே.சூர்யாவுடன் இப்படத்தில் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நிலா. இவரின் முழுபெயர் மீரா சோப்ரா.

தற்போது நாடு முழுக்க கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நிலாவின் தந்தை சாலையில் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி அவரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

இந்நிலையில் நிலா போலிஸ் காலனியில் நடந்த இந்த சம்பவம் குறித்து டெல்லி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. நிலா மருதமலை, காளை, இசை படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.