படுப்பதற்கு முன் உங்க முகத்தை கழுவினால் என்ன நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

அவசர காலக்கட்டத்தில் யாரும் தங்களை கவனித்துக் கொள்வதில்லை. பகலில், நம் தோல் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும்.

உங்கள் சருமத்தை நீங்கள் கவனித்துக்கொள்வது உங்கள் வாழ்க்கையின் வயது முதிர்ச்சி சரும வேகத்தை குறைக்கும். அதற்கு உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம்.

இரவில் உங்கள் கழுவினால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம்:

  • உங்கள் முகத்தை சரியாக கவனிக்காவிட்டால் உங்கள் உடல் தோல்களை துளைகள் அடைத்துக் கொள்ளும். மேலும், நீங்கள் பயன்படுத்தும் மேக்-அப் தயாரிப்புகள் உங்கள் தோல் துளைகளில் மூழ்கிவிடும். இரவில் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் உங்கள் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் தூசு அனைத்தும் நீக்கி உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
  • இரவில் முகத்தை கழுவுவதன் மூலம் உங்கள் கண் இமை முடிகள் உதிர்வதை தடுக்கப்படுகிறது. நீங்கள் வைக்கும் மஸ்காராவில் உள்ள ஏராளமான வேதிப்பொருட்கள் இருப்பதால் இவை கண்களுக்கும், கண் இமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவில் படுக்க போவதற்கு முன் முகத்தை கழுவினால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
  • இரவில் முகத்தை கழுவுவதன் மூலம் நல்ல இரவு தூக்கத்தை பெறலாம். இதனால் உங்கள் சருமத்திற்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்.
  • இரவுநேர மாய்ஸ்சரைசர்கள் மற்றும் இரவு கிரீம்கள் என இயற்கை மற்றும் செயற்கை தயாரிப்புகள் சந்தையில் விற்கப்படுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் தோல் புத்துயிர் பெற உதவுகிறது. அதனால் செயற்கையான பொருட்களை வைத்து உங்களை முகத்தை பராமரிப்பதை விட்டு விட்டு இயற்கையான முறையில் உங்கள் முகத்தை பராமரித்தால் உங்கள் முகம் மென்மையாக இருக்கும். எனவே, இரவில் தூங்கச் செல்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவினால் புத்துணர்வு கிடைக்கும்.
  • இரவில் உங்கள் சருமத்தை தண்ணீரால் சுத்தம் செய்வதன் மூலம் தோல் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் பிற தோல் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
  • இரவில் உங்கள் முகத்தை முதலில் கழுவாதபோது மாசு மற்றும் ஒவ்வாமைகளை உங்கள் படுக்கையில் கொண்டு செல்கிறீர்கள் என்று அர்த்தம். இது தினமும் தொடரும்போது, சரும மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். இரவு தூங்குவதற்கு முன்பு உங்கள் முகத்தை சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.