சொந்த மகளை சீரழித்த தந்தை..!!எங்கு தெரியுமா ??

இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தின் ஜலாலாபாத் நகரில் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 15 வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று மனைவி அங்குள்ள கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்ற நிலையில், வீட்டில் இருந்த சிறுமியின் தந்தை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளான்.

சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்ததும் சிறுமி நடந்ததை கூறி கதறி அழவே, சிறுமியிடம் விஷயத்தை தெரிந்துகொண்ட தாய், கணவனிடம் சண்டையிட்டுள்ளார். கணவன் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டியுள்ளான்.

இதனையடுத்து சிறுமியின் தாய் அங்குள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் சிறுமியின் தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.