தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில், கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே.. இவர் முகமூடி திரைப்படத்திற்கு பின்னர் பிற தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நடிகர் சூர்யாவுடைய அருவா திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
ஆனால், சூர்யாவின் அருவா படத்திற்கு ராஷி கண்ணா தேர்வாகியுள்ள நிலையில், பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு திரையுலகை பொறுத்த வரையில் பூஜாவின் திரைப்படங்கள் அனைத்தும் தொடர்ந்து பல வெற்றியை பெற்று வருகிறது.
இதனால் தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி அறிவித்த நிலையில், இந்தி திரையுலகில் நடிகர் சல்மான்கானுடன் “கபி ஈத் கபி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது ஊரடங்கு நிறைவுபெற்றவுடன் துவங்கவுள்ளது.
இந்த தருணத்தில், பூஜா ஹெக்டேவை அணுகிய படக்குழு, மற்றொரு படத்தில் கவர்ச்சி மற்றும் படுக்கை அரைக்க காட்சியுடன் கதை கூறியுள்ளது. இதனையடுத்து கவர்ச்சி வேண்டும் என்றால் ரூ.3 கோடி சம்பளம் தர வேண்டும் என்று கூறியுள்ளதாக தெரியவருகிறது. இதனால் பூஜாவை படத்தில் நடிக்க வைக்கலாமா? வேறு நடிகையை பார்க்கலாமா? என்று படக்குழு யோசனையில் உள்ளது.