மிரட்டல் காட்டிய தளபதி! மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!!

விஜய்யின் சுறா படத்தை ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகிறார்கள். டிவிட்டரில் படத்தின் டேக்கும் டாப் லிஸ்டில் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்த விவரங்களையும் நாம் தெரிவித்திருந்தோம்.

கடந்த ஏப்ரல் 9 ல் வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போய்விட்டது. இது படக்குழு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பெரும் சோதனை தான்.

அதே வேளையில் இன்று விஜய் ரசிகர்களுக்கு மற்றொரு முக்கியமான நாள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெற்றி பெற்ற துப்பாக்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாள் இன்று என ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.