Apple Maps பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய வசதி

உலக அளவில் மிகவும் பிரபல்யமான கூகுள் மேப்பினைப் போன்று ஆப்பிள் நிறுவனமும் மேப் சேவையை வழங்கி வருகின்றது.

Apple Maps எனும் குறித்த சேவையை iOS சாதனங்களை பயன்படுத்துபவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இச் சேவையில் தற்போது புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி COVID-19 பரிசீலனை செய்ய விரும்புவர்கள் அதற்கான இடங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் தமக்கு அண்மையில் உள்ள இடத்தினை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும்.

எவ்வாறெனினும் இச் சேவையானது தற்போது அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாக அதிகரித்து வருகின்றமையினால் ஏனைய நாடுகளிலும் இவ் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.