ட்ராபிக் போலீசாருக்கு உதவிய நடிகர் யோகிபாபு.. என்ன வாங்கி கொடுத்துள்ளார் தெரியுமா?

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை மே உள்ளார்.

இதுவரை, இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,283 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழப்பு 825 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை ஏழை என பலர் தங்களின் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் யோகி பாபு அவர்கள் கொரோனாவால் அவதியுற்று வருபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அதோடு யோகி பாபு ரசிகர்கள் கொரோனா வைரஸ் குறித்து பாபு மாஸ்க், சானிடைசர் உட்பட பல உதவிகளை செய்து உள்ளார்.

தற்போது, நடிகர் யோகி பாபு 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போலீசாருக்கு உதவும் வகையில் அவர்களுக்கு N95 மாஸ்க் மற்றும் வகையில் பானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.

சென்னை ட்ராபிக் போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலிஸாருக்கு இதை வழங்கியுள்ளார். நடிகர் யோகிபாபு செய்த உதவிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் கூட நடிகை யோகி பாபு அவர்கள் நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கி இருந்தார்.